எப்பேர்ப்பட்ட கோபக்கார மனிதனையும் பொறுமை மிக்கவனாக மாற்ற முடியும் என்பதை தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்கிறார் நாயகி. இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது அடிதடிக்கு அஞ்சாத கல்லூரி மாணவர் தனுஷை. அவரோ சின்ன கோபத்துக்கும் பெரிய சம்பவம் செய்கிறவர். நாயகியின் எந்த ஒரு அணுகுமுறைக்கும் அவர் இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனாலும் தனுஷை சாந்தமிகு இளைஞனாக மாற்றும் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் நாயகி. தனுஷை மாற்ற முடிந்தால் மட்டுமே நாயகியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் நாயகி. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடையே படம் கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி என வந்தாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவம்…
Read MoreDay: December 1, 2025
தயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் கணேஷ் K பாபு;
Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும். ‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான **‘கராத்தே பாபு’**வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். இந்தப்…
Read More