நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள டிரெய்லரும் படம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களுடன் படக்குழுவினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று…
Read MoreDay: December 2, 2025
பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு செயலி, (FANLY APP)ஃபேன்லி-யை நடிகர் திரு.சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ், காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். பத்மபூஷண் விருது பெற்றவரும், தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த செயலியை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் தளத்தில் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது. ஃபேன்லி(FANLY APP) என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும். செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு, …
Read Moreரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன!
உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. ’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சிறந்த இருக்கைகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தரமான ஒலியுடன் படத்தை சிறந்த முறையில் கண்டு களிக்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. முன்பதிவு தொடங்கும் வேளையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவதார் தீமுடன்…
Read MoreZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர் உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க…
Read Moreஅம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின்…
Read More