தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, டயங்கரம் படம்…
Read MoreDay: January 22, 2026
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது தயாரிப்பான ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது நான்காவது தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இந்த படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடிக்க, இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்குகிறார். இன்று (ஜனவரி 21, 2026) காலை, படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.…
Read Moreடோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி” படக்குழு ! ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் (Worldwide Films banner)…
Read Moreதிரெளபதி 2′ திரைப்படத்திற்காக மனதை ஊடுருவும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்!
வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, “நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன்…
Read Moreநடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விரைவில்…
Read Moreசுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி –…
Read More