செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர்…

Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன்…

Read More

இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை!!

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். – இயக்குநர் பா.இரஞ்சித்  

Read More