டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது ’வெள்ளகுதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம். கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 28) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல்…

Read More

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார். பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான்.…

Read More

“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து, புகழ் பெற்ற பவன் சடினேனி ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப்…

Read More

STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது!

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி – படத்தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்”…

Read More