இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார். ‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி’ படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை…
Read MoreDay: February 1, 2026
ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது! திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!
வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ். தற்போது நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. ’ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1, 2026) இடுக்கியில் எளிய பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது. ’பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ‘ஹைக்கூ’ படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டாக்டர் D. அருளானந்து…
Read Moreமனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021) படங்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். -யோகி பாபு
மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021) படங்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்தும், என் கலைக்கு வடிவம் தந்தும் இருந்த இந்த மண்ணின் — தமிழ்நாட்டின் அரசால் — அங்கீகரிக்கப்படும் உயரிய விருது இது. இதை நான் எப்போதும் பணிவுடனும் பெருமையுடனும் சுமந்து செல்லும் ஒரு மாபெரும் மரியாதையாகப் பார்க்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையதாய் மட்டும் இருந்ததில்லை. இந்தப் படங்கள், துணிச்சல், நம்பிக்கை, சினிமாவுக்கான அன்பு, அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட காதல் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல். தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவுக்கும்,…
Read Moreராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு
மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கோனிடேலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பிறந்துள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அன்பும் நன்றியும் நிறைந்த செய்தி, கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியது. “அளவற்ற மகிழ்ச்சியுடனும்,…
Read Moreஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் ‘அமைதிப்படை’ படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்
தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் ‘அமைதிப்படை’ படத்தை மீண்டும் வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படத்தை 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் ஸ்பேரோ சினிமாஸ் பேனரில் கார்த்திக் வெங்கடேசன் வெகு விரைவில் வெளியிடவுள்ளார். இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இக்கதை பொருந்தும் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட…
Read Moreவித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது.., இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள்…
Read Moreசசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை…
Read Moreஇயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோர் இன்று அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாட்டை தொடங்கி வைத்தனர்!
மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும்…
Read Moreதயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். *இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,* ”எனக்கு ஏழு வயதாக…
Read More