கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்…

இந்த நிகழ்வு பிரிவாரம்  கேன்சர் ஹாஸ்பிடல் இன்று காலை நடைபெற்றது. இதில் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று டாக்டர் பானுப்ரியா பேசினார் அப்போது கேன்சரின் ஆபத்தை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். அவர் தங்களது கற்பவிருட்சம் தொண்டு நிறுவனத்தின் மூலம் 3000 மேற்பட்ட மக்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தபோது சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கேன்சர் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது . எனவே இது போல் தமிழகம் எங்கும் நாங்கள் எங்கள் சேவை தொடங்க உதவியாக இந்த கருவியை வழங்கிய ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப்க்கு நன்றியை தெரிவிக்கிறோம் என்றார்.. மேலும் இதில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்ன் ப்ரெசிடெண்ட் பாலாஜி சீனிவாசன் மற்றும் சந்தியா அருண் குமார் ஆகியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்..

Read More

சிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026

தலை நிமிர் திரை விருதுகள் 2026 – திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா சென்னை, பிப்ரவரி 14, 2026: தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள், நடிகர் கதிரவன், நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகை தியா, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பல்வேறு திரைப்படப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது விழா சிவானி ஸ்டூடியோ சார்பில்,…

Read More

That Day I Did Not Brush — குழந்தையின் நிர்ப்பாவமான பார்வையில் சொல்லப்படும் துயரத்தின் ஒரு மென்மையான படம்.

அன்பும் நுட்பமும் கலந்த இந்த படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மெதுவான மாற்றங்கள் வழியாக சொல்லுகிறது. இழப்பை நெருக்கமாகவும் மென்மையாகவும் பார்க்கும் இந்த படம், எவ்வளவு சாதாரணமான பழக்கங்களுக்குள்ளும் ஆழமான உணர்வுகள் மறைந்து கிடக்கலாம் என்பதை நினைவூட்டுகிறது. மிக குறைந்த கதை சொல்லலும் அமைதியான காட்சித் தேர்வுகளும் மூலம், நாம் தினமும் கவனிக்காமல் கடந்து செல்லும் விஷயங்களை — தயக்கம், அமைதி, மனத்தின் நுண்ணிய அலைச்சல்கள் — ஒரு நிமிடம் நின்று கவனிக்க இந்த படம் அழைக்கிறது. இந்த குறும்படம் Haiku Kadhaigal தொடரின் ஒரு பகுதி. எழுத்தாளர்-இயக்குநர் பிரியதர்ஷினி ஸ்ரீதரன் அவர்கள் Huggaheim Pictures மூலம் மனிதர்களின் நெருக்கமான உணர்வுகளை ஆராயும்…

Read More

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளம்: ‘பொன்னியின்…

Read More

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் வழங்கும் சிவகார்த்திகேயனின் “சேயோன்”

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது. நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக “சேயோன்” அமையும். அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து…

Read More

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல்…

Read More