Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு. G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன. பெங்களூரு நகரின்…
Read MoreDay: February 17, 2026
தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசை இந்த படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாடலாசிரியர்…
Read Moreதிரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’…
Read More‘கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’. குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி,…
Read Moreநடிகர் விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி பி.டி செல்வகுமார் உதவி
சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை சார்ந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர் முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ) பேசியதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர் பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல…
Read More‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்
திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன்…
Read Moreநடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்!
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம்…
Read More‘கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’. குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி,…
Read More*இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!*
ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார். படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணி ரத்னம்…
Read More