இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, ” இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு…
Read MoreDay: February 19, 2026
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!
மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார். குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக…
Read Moreவன்முறையும் மர்மமும் நிறைந்த உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்!!
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில், கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது. இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின்…
Read Moreஇயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த ‘ஹாட்ஸ்பாட் 2’ தயாரிப்பாளர்கள்
கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர். ‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம்…
Read More“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக…. சில படங்கள்…நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய…
Read Moreயோகி பாபுவின் “கெணத்த காணோம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் “கெணத்த காணோம்” மூலம் நம்மை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 19, 2025) வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலமானதால், இந்த வெளியீடு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவர் இயக்கிய “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்ய சோதனை” படைப்புகள் இந்திய சினிமாவில் தலைசிறந்த மைல்கற்களாக…
Read More