சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம்  

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.   இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  இணைந்து இந்த ஆண்டிற்கான  சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.  ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்வு தி.நகரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் நிறுவன…

Read More

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது!!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது. Neo Castle Creations-இன் சத்யா கரிகாலன், Million Dollar Studios-ன் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக,…

Read More

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக…

Read More

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன். தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை…

Read More