அரசு கவின் கலைக் கல்லூரி (Government College of Fine Arts),

1850-ல் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பழமையான கலை நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஓவியம், சிற்பக்கலை மற்றும் கலை வடிவமைப்பு சார்ந்த இளங்கலை (BFA) மற்றும் முதுகலை (MFA) படிப்புகளை வழங்குகிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூரில் உள்ள இது, நவீன இந்தியக் கலையின் தொட்டில் என்றும் அழைக்கப்படுகிறது. 1928 ல் – திரு.தேவி பிரசாத் ராய் சௌதித்ரி அவர்கள் இணை முதல்வராக கல்லூரி நிர்வாகத்தை ஏற்கிறார். 1929 ல் இந்தியாவின் முதல் முதல்வர் என்கிற பெருமை இவரையே சாரும். இந்தக் கல்லூரி கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது மற்றும் 175 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைத்துறையில் பல ஓவியக் கலைஞர்களை, சிற்பிகளை,திரைப்பட முன்னனி கலை இயக்குனர்களை, நடிகர்களை, சகலகலா வல்லவர்களை மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரி என்ற பெருமையை பெறும். கடந்த மாதம் பிப்ரவரி…

Read More