ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை

சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி,…

Read More

பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு, அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் – ​சீனு ராமசாமி

மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு, அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் ​கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் திறப்பு. இந்திய இலக்கியத்தின் உச்ச பீடம், தகுதியான ஒருவரைச் சென்றடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ​இக்கடிதத்தை எழுதும் நான் சீனு ராமசாமி. தமிழ்த் திரையுலகில் மானுட அறத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்யும் திரைப்படங்களுக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநராக அறியப்பட்டவன். திரைப்படங்களைத் தாண்டி என் அகம் செயல்படும் முதன்மைத் தளம் கவிதை. எனது கவிதை நூல்களான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’, ‘கோயில் யானையின் சிறுவன்’, ‘மாசி வீதியின் கல் சந்துகள்’, ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’, ‘மேகங்களின் பேத்தி’, ‘நதியழகி’, ‘முதல் ருசி’, ‘நிலத்தவள்’, ‘தயை’, ‘காற்றால் நடந்தேன்’ ஆகியவையும், ‘சீனு ராமசாமி தேர்ந்தெடுத்த கவிதைகள்’…

Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன. மமிதா…

Read More

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே…

Read More