‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை…

Read More

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ஏப்ரல்…

Read More