பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம். ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. மக்களின் வரவேற்பில் திரையரங்குகளில் திருவிழாக்கோலமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது.., “‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட…
Read MoreDay: April 1, 2026
“ஹே ப்ரூஸ்” – உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ
கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த மியூசிக் வீடியோவை ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ளார். இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது. இந்த மியூசிக் வீடியோவின் ஒளிப்பதிவு / எடிட்டிங்…
Read Moreஇசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பாடல் வரிகளை, த.வெ.க மற்றும் விஜய்க்கான அரசியல் பாடல்களை எழுதி வரும் கானா சல்லு எழுதியுள்ளார். ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’. ‘கோலி சோடா 2’, ‘விழித்திரு’, ’கொலையுதிர் காலம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் பல ஹிட் மற்றும் டிரெண்டிங் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையமைப்பில்…
Read More
