சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம்…
Read MoreDay: April 16, 2026
நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு
ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் – ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில்…
Read Moreசத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம். தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது…
Read More