மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்! இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’…

Read More

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி” டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும்…

Read More

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும்…

Read More