‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) . இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர்…

Read More

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு 

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்… ஆளுமை மிக்க அவரது இருப்பையும்… காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் – தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது – பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது – நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ”வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்”…

Read More

எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’

‘எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது ‘சத்திய சோதனை’ என்கிற சுயசரிதையைப் படியுங்கள்’ என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப்…

Read More

பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான Son of Thanjai, Xbox Series X|S மற்றும் PS5-இல் வெளிவர உள்ளது!

இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை @madhankarky எழுதுகிறார். எந்திரன், பாகுபலி உட்பட 400 திரைப்படங்களுக்கும் மேலாக ஆயிரம் பாடல்களுக்கு மேலா பணியாற்றிய மதன்கார்க்கிக்கு இது முதல் கேமிங் முயற்சி. உண்மையான தென்னிந்திய தற்காப்புக் கலை மரபில் வேரூன்றிய, கேமிங்கில் இதுவரை காணப்படாத, நெகிழ்வுத்தன்மை கொண்ட சுருள் வாள் (Surul Vaal) இவ்விளையாட்டில் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகள் உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளுள் ஒன்றான களரிப்பயற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் சென்னையை மையமாகக் கொண்ட 30 பேர் கொண்ட @AyeletStudio குழு. இது தமிழ் மொழியில் ஆங்கில சப்டைட்டிலுடன் உலகெங்கும் வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்களுக்குத் தமிழ் மண், மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும். Xbox Series X|S மற்றும் PS5-இல் விரைவில். கேம்பிளே ரிவீல் டிரெய்லரைப் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=CuR16jMhdkQ…

Read More

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

‘சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்! * சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி – உலகநாயகன் கமல்ஹாசன் “சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்” – பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன் – தேவி ஸ்ரீ பிரசாத் பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான ‘சிங் கீதம்’ படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன்,…

Read More