நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி!!

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது . கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read More

லவ் ஓ லவ்’ படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

 ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) பேனரின் கீழ் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) நிறுவனத்துடன் இணைந்து தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளமை துள்ளும் பொழுதுபோக்குத் திரைப்படமான **’லவ் ஓ லவ்’ (LOVE OH LOVE)** படக்குழுவினர் தங்களது திரைப்பட ப்ரமோஷனை சென்னை ஸ்கைஒன் ஆம்பா மாலில் (SkyOne Ampa Mall) மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினர். அங்கு நடைபெற்ற சுறுசுறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த மாலையில் படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களால் ஈர்க்கப்பட்ட துள்ளலான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மாலில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை உற்சாகப்படுத்தின. நடிகர், நடிகையர் ரசிகர்களுடன் விரிவாகக்…

Read More

நீங்கள் சினிமாவுக்கு கொடுத்தால் சினிமா உங்களுக்கு கொடுக்கும்: இயக்குநர் மித்ரன் பேச்சு!

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது . அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.…

Read More

நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது!!

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக ‘விஜயம்’ உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்கிறார். பாலி ஜூனியர் பிக்சர்ஸ் (Pauly Jr.…

Read More