மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் விஷ்ணு – செல்லா அய்யாவு… வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர்…
Read MoreDay: July 5, 2026
எலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’ என தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான *ஆர்.டி.பாஸ்கர்* அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான *ஜெயன்* தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது. குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்! தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் *”என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்”* என்று *ரமணன் பாலகங்காதரன்* அவர்கள் முன்வந்தார். தன் தம்பிக்காக இயக்குனர் *வெங்கட் பிரபு*, *”நான் கதை தருகிறேன்”* என்றும், *யுவன் சங்கர் ராஜா* *”நான் இசை…
Read More
