நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள்…
Read More
