தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் – திரைப்படம் – நட்சத்திர கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள் – விளம்பரங்கள் – பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள் – திரையரங்குகள் – ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் – என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான…
Read MoreDay: July 28, 2026
ராஜாஸ் ப்ளேலிஸ்ட் படத்திற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்
அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்! மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் திரைப்படம்; வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் இணைந்திருக்கும் இசை சார்ந்த குடும்பத் திரைப்படம்! எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ராஜாஸ் பிளேலிஸ்ட்” (Raja’s Playlist) திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது பின்-தயாரிப்பு (Post-Production) பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இத்திரைப்படத்தின் மூலம் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பின் காரணமாக, தமிழ் சினிமாவின் முன்னணிப் பிரபலங்கள் சிலர் இத்திரைப்படத்திற்காக…
Read Moreதுல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி – AOT திரைப்படக் குழுவினர் – அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘மிட்டாய் மழை- Mittai Mazhai’ யை வெளியிட்டுள்ளனர். ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘மிட்டாய் மழை’ பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்… நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்… பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்… விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல்…
Read More*இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா*
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது…
Read Moreஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்ஷன்!
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்),…
Read More‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது: “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கரின் இனிய இசையிலும், அழகான காட்சிகளுடனும்…
Read Moreதுல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்- அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் – அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது… காதல் – நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை… ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது ‘வானே வானே..’ எனும் முதல் பாடலை வெளியிட்டு,…
Read More
