நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை உலகளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்சன்ஸ் விநியோகம் செய்கிறது. *30 ஜூலை 2026:* நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரெய்லர், இன்று (ஜூலை 30, 2026) அதிகாலை இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. *நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’…

Read More