வாழ்க்கையின் எந்த சவாலையும் தாண்ட உதவுவது உண்மையான நண்பர்கள்தான். இந்த Friendship Day-யை முன்னிட்டு, நண்பர்கள், சகோதரத்துவம் மற்றும் மறக்க முடியாத பந்தங்களை கொண்டாடும் சிறப்பு JioHotstar வாட்ச் லிஸ்டை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். *1. சஞ்சு (Sanju)* சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த படம், உண்மையான நண்பன் யார் என்பதை நினைவூட்டுகிறது. எல்லா சிக்கல்களிலும் சஞ்சுவுக்கு துணையாக நிற்கும் கம்லியின் நட்பு, நட்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. *2. ஹாரி பாட்டர் (Harry Potter)* ஹாரி, ரான், ஹெர்மயோனி மூவரின் நட்பு, விசுவாசமும் ஒற்றுமையும் எந்த மந்திரத்தையும் விட வலிமையானது என்பதை உணர்த்துகிறது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் ரசிக்க ஏற்ற ஒரு காலத்தால் அழியாத கிளாசிக். *3. சிச்சோரே (Chhichhore)* கல்லூரி வாழ்க்கையின் கலகலப்பையும், விடுதி நண்பர்களின் மறக்க முடியாத பந்தத்தையும் கொண்டாடும்…
Read MoreDay: July 31, 2026
டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!
K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்நிகழ்வினில் பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும், “நூதனா” பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது ஒரு அருமையான அனுபவம். இமான் சார் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த…
Read Moreசசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI, India—July 31, 2026 — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா…
Read MoreSpider-Man: Brand New Day விமர்சனம்
பின்னணி இசையும், ஒளிப்பதிவும், விஷுவல் எஃபெக்ட்ஸும், பார்க்கும் பார்வையாளர்களையும் நியூ யார்க் தெருக்களில் கட்டடங்களுக்கு மத்தியில் ஸ்பைடர் மேனுடன் பறக்க வைக்கின்றன. அற்புதமான விஷுவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளித்துள்ளனர் மார்வெல் ஸ்டுடியோஸ். பீட்டர் பார்க்கர் யார் என உலகம் மறந்தும் விடும்படி மாயமந்திரம் போட்டு விடுகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அனைவரும் தன்னை யாரென மறந்துவிட்ட உலகில், பீட்டர் பார்க்கரின் தனிமையோடு படம் தொடங்குகிறது. நட்பாகப் பழகக்கூடிய ஏரியா பையன் போல் ஸ்பைடர் மேன், நியூ யார்க் நகரில் குற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார். டேமேஜ் கன்ட்ரோல் துறையை நோக்கி ஒது பீரங்கி அதிவேகமாக முன்னேறுகிறது. ஸ்பைடர் மேன் அதை மிகக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். அந்த பீரங்கியை இயக்கியது ஒரு வயதான துப்பரவு தொழில் செய்யும் பெண்மணியாக இருக்கிறார். கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒரு…
Read More
