‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில்…

Read More

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார். இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத – அதிகார தோரணையில் பின்னோக்கி…

Read More

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்” என்று ‘பெரும் மௌனங்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா தெரிவித்துள்ளார்.

Read More