குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும்…

Read More

இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் ‘AAA சினிமாஸ்’ பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது!

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸை’ பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார். விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ‘AAA சினிமாஸ்’ இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை ‘AAA சினிமாஸ்’ உருவாக்கியுள்ளது. ‘AAA சினிமாஸ்’ என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா அனுபவத்தை தரும் முயற்சிதான் இது. அதிநவீன…

Read More

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’.

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான…

Read More

உறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து…

Read More