மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், “திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என…
Read MoreDay: August 23, 2026
முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்..
நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. அடுத்த கட்ட பயணம்.. நான் சரி எனில் நீ தவறா… இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை…. பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?.. எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. ஆம் இது உங்களுக்கான மேடை.. உங்களின் பார்வையை பேசுங்கள்.. உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. நான் கூப்பிடுவது மக்களை.. அவர்களோடு பேச.. அவர்களை பேச வைக்க.. வாங்க பேசலாம்..
Read Moreமில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., “ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான்…
Read More
