சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார். பக்ருதீன் மாஸ்டர் நாடக்குழுவில் இணைந்தவர் அங்கிருந்து முன்னணி மீடியா நிறுவனங்களில் வேலை செய்து பின்பு சினிமாவில் நுழைந்தார். தனது சினிமா பயணம் பற்றியும் ‘மொத ராத்திரி’ படம் குறித்தும் பானுப்பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்‘ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.…
Read MoreDay: August 27, 2026
Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது
Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் – காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன்,…
Read More‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா” பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார். பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. “இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில…
Read MoreHi ஹாய் – விமர்சனம்
கதை… எத்தனை வயதானாலும் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் கவின்.. ஆனால் இவருக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் பாக்யராஜ் – ராதிகா செய்து கொண்டிருக்க அவர்களை எதிர்க்க முடியாமல் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி விடுகிறார் கவின். அதுபோல பிடிக்காத ஒருவரை கட்டி வைக்க உறவினர்கள் முயற்சி செய்வதால் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வருகிறார் நாயகி நயன்தாரா. இருவரும் ஒரு கட்டத்தில் சென்னையில் சந்தித்து ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.. அதன் பிறகு இவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்கள் தான் இந்த ஹாய்.. நடிகர்கள்.. நயன்தாரா – தேவயானி கவின் – மயில்சாமி கவின் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஒரு கட்டத்தில் பொய் சொல்லி நயன்தாராவை காதலிக்க வைக்க முயற்சிக்கிறார்…
Read Moreஅமரம் – விமர்சனம்…
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ‘அமரம்’ கதை… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் மரியம் ஒரு கூலிப்படைத் தலைவன்.. இவரது உறவுக்கார பையன் நாயகன்.. ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தையை இவர் கொலை செய்ய இவருக்கு வேலை வருகிறது. நாயகன் தன் தந்தையை கொடூரமான முறையில் கொல்வதை பார்த்து விடுகிறார் நாயகி ஐரா. இதனையடுத்து தானே அவனை பழிவாங்க வேண்டும் கொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்.. அவரின் முயற்சி பலித்ததா என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் (மொசாட்) நீண்ட தலை முடி நீண்ட தாடி என முகம் முழுவதும் தன்னுடைய முகபாவனைகளை முழுவதுமாக மறைத்து விட்டார் நாயகன். காட்டுவாசி…
Read More
