லயன் வீ ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரான் டாங் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. இப்படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. லயன் டாக்டர் எஸ். வாகேஷ் மற்றும் ராணி ஸ்ரீ ரெட்டி தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஆர். ஆனந்த் எழுதி இயக்குகிறார். GGB விஜயலட்சுமி, பப்லு மற்றும் அனிதா விஜய் ஆனந்த் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். இப்படத்தில் சமுத்திரக்கனி, டேவிட் டிட்டோ, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், தம்பி ராமையா மற்றும் தனுஜா மதுரபந்துலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுகிறார். **இதுவரை காணாத புதிய அவதாரங்களில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு** இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான அவதாரங்களில் தோன்றுகின்றனர். மேலும், சமுத்திரக்கனி முதன்முறையாக ஹாரர்…
Read More
