‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.…
Read MoreDay: September 18, 2026
இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!
எழுத்தாளராக அவதாரம் எடுத்த நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய ‘நான் ராமசாமி பேசுறேங்க’, ‘மகிழ்வித்து மகிழ்’ இரண்டு புத்தகங்களுக்கும் இயக்குநர் பேரரசு அவர்களிடம் அணிந்துரை பெற்றிருந்தார். இந்நிலையில் புத்தகத்தை இயக்குநர் பேரரசு அவர்களிடம் வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றார்! என் “நெஞ்சை தொட்டாயே..!” திரைப்படத்தில் கதாநாயகனாகவும், “திகிலோடு விளையாடு..!” திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, “நான் ராமசாமி பேசுறேங்க..!” “மகிழ்வித்து மகிழ்..!” ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
Read More‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணையும் ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!
சமையலறை தயாராகிவிட்டது… ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டன… சுவையான உணவுகளின் மணமும், பரபரப்பும் இனி தொடங்கவிருக்கிறது. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) நிகழ்ச்சியின் வெற்றியாளரான செஃப் சாஷி செலியா, தற்போது செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் ( Celebrity MasterChef Tamil) நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு பிரபலங்களை ஒன்றிணைத்து, உணவு, பொழுதுபோக்கு மற்றும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த சமையல் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார். சாஷி செலியாவின் மாஸ்டர்செஃப் பயணம் வழக்கமானதாக இருந்ததில்லை. தனது பணியை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவரது சமையலில், சிறுவயதில் அவரைச் சுற்றி வளர்ந்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு…
Read Moreமுதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகளைப் பேசுவது போல ஆரம்பமாகிறது. காதலர்களின் உறவு, குடும்பத்தின் எதிர்ப்பு என இயல்பான காதல் கதைக்கான களத்துடன் நகரும் டிரெய்லர், பாதியில் திடீரென யூடர்ன் அடிக்கிறது. அதன்பிறகு, காதலர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வதும், அந்தப் பிரச்சனை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், அதிரடி…
Read More
