தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற *‘Demonte Colony 2’* திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் *White Nights Entertainment* நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனத்துடன் இணைந்து புதிய இந்தோ-ரஷ்ய திரைப்படமான ‘SMASH’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. விளையாட்டு, உணர்வுகள், போராட்டம் மற்றும் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் *‘SMASH’*, ரசிகர்களுக்கு ஒரு புதிய திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த *White Nights Entertainment*…
Read MoreDay: September 19, 2026
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18 (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது ‘பத்தா’ படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில்…
Read More
