மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும் பேச அப்படியே திரையில் வரும் காட்சிகள், அவர் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. தொடர்ந்து, ஆக்ஷன் காட்சிகளுடன் பத்தாவின் பல்வேறு முகங்களை…
Read More
