ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய…

Read More

கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர் வெளியீட்டு விழா! 4000 மாணவ-மாணவிகள் உற்சாக வரவேற்பு!

மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ​முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை (Second Look) புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ​இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் 3rd look போஸ்டரை வெளியிட்டனர். ​இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.…

Read More