“கமர்ஷியல் பாடல்கள் எனது முகவரி அல்ல” ; ‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் சினேகன் சீற்றம்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.. பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். இப்படத்தின் இசை மற்றும்…

Read More

”இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்” -சிக்லெட்ஸ் பட இயக்குநர்

  ‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்…

Read More

தென்னிந்திய திரைப்படம், டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம். 50வது ஆண்டு பொன்விழா |

  தென்னிந்திய திரைப்படம் , டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது. விழாவினை குஷ்பு சுந்தர் மற்றும் தேவயாணி இருவரும் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர். விழாவில் ராமதுரை, ஜே.துரை, தேனப்பன், எம். கபார், நாச்சியப்பன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தை பற்றிய 50 வருட நிகழ்வுகள் ஆவணப்படமாக காட்டப்பட்டது. முல்லை – கோதண்டம் இருவரின் ஓரங்க நாடகம் மூலம் தயாரிப்பு நிர்வாகிகள் பற்றிய வேலை விவரங்கள் நகைச்சுவையாக நடித்துகாட்டப்பட்டது. 50 வருட பொன்விழா நினைவை குறிக்கும் புத்தகத்தை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி வேந்தர் பாரிவேந்தர் வெளியிட, , வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி, துணைத்தலைவர்…

Read More