ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது. தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல யூகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அது அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை…
Read MoreTag: கே.வி.என்.புரொடெக்ஷன்ஸ்
ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடவுள்ளார் !!
யாஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமானது!!, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது!! ‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என, ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக, அவர் எந்த படத்தையும் அறிவிக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.…
Read More