Dear Media Friends Herewith sending the Statement from Director & Actor R.Parthiban Good morning friends, நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை…
Read MoreTag: மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக நடிகர் ஆனந்தராஜ் பதிவு
மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் அடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த நாலு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொல்லனாத் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மிக கனமழை விடாமல் பெய்து வருவதால், சென்னையின் முக்கியமான பகுதிகளான கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, பல்லாவரம், அனகாபுத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது. இதோடு மின்வெட்டும் இருப்பதால் மக்களின் அன்றாடப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றவும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும் முழு மூச்சில் பணியாற்றும் வந்தும் கூட, பல இடங்களில் இது போன்ற பணிகள் வேகமின்றி…
Read More