டார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.   இயக்குநர் டி கே இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். ஃபேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி எஸ் ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri…

Read More

உடல்டையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியீடு!

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. அவரது இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கணிசமாக உயர்த்தியுள்ளது.

Read More

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்! எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை…

Read More

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் பங்கேற்று சக்திவேலனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜ சேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா…

Read More

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது. குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில்…

Read More

மலையாள திரையுலகம் என்னைத் தேர்ந்தெடுத்து, அளவற்ற அன்பையும் அளித்தது- கைரா வாசுதேவன்

நடிகை கைரா வாசுதேவன்- பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார் நடிகை கைரா வாசுதேவன். இந்த தருணத்தில் நடிகை கைரா வாசுதேவன் மலையாளத்தில் அறிமுகமான ‘கலீஃபா’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இது தொடர்பாக நடிகை கைரா வாசுதேவன் பேசுகையில், ” பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி. ஆபிரகாம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து அறிமுகமாவதால் மிகுந்த அழுத்தம் இருந்தது. அவர்கள் என் மீது…

Read More

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் இரத்தமும் சதையுமான…

Read More

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர். மிகுந்த…

Read More

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…

Read More

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…

Read More