வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும், ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்புடன், படக்குழு மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்…
Read MoreAuthor: reporter
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் திரு. ச. ஜோசப் விஜய்யின் உருவங்களை சிற்பமாக செதுக்கி அசத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் திரு. பூமிநாதன் மற்றும் முதலமைச்சரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை கெளரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ஜனநாயகன் திரைப்படம் வரையிலான 69 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10…
Read Moreநடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும். ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை…
Read Moreரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது
லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய…
Read Moreநடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன் கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார். *கொச்சி, மே 2026:* லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் என மோகன்லாலின் பல்வேறு முகங்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம்,…
Read MoreSUN NXT-இல் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் சிவா & பிரேம்ஜி அமரன் கலகல பேச்சு
SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய ‘ஜல்சா பண்ணுங்கடா..’ ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது. இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு… தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு தான் திரும்ப வேண்டும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய போது.. அங்கு இருந்தவர்களும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். சுருக்கமாக…
Read Moreசிங்கப்பூரில் மீலாதுன் நபி திரைப்படம்
தாரகை முத்தமிழ் கழகம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு, மே 10ஆம் தேதி ஊட்லண்ட்ஸ் நூலகத் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதினை சிறப்பு விருந்தினர் வழங்கிக் கௌரவித்தார். மேலும், இப்படத்தின் சமூகத் தாக்கம் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இயக்குநர் மில்லத் அகமதுவுக்கு ‘சிறந்த ஆவணப் படம்’ விருதும் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 16-ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் இப்படத்தைத் திரையிடவுள்ள ரெயின்போ ஈவென்ட்ஸ் அமைப்பாளர் திருவாட்டி ரசிதா பேகம், படத்தின் சுவரொட்டியைப் பெற்றுக்கொண்டார். எனக்குத்…
Read Moreஇந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது
நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான்…
Read Moreசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்
வரவிருக்கும் இசை நாடகமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 21 அன்று வெளியிட்டார். இது படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாகும். மூத்த திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் ‘சாருகேசி’, இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இப்படத்தில் ஒய் ஜீ மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு…
Read Moreசுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!
தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன. புஷ்கர் – காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள்…
Read More