காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சிகளிலேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற்பால் உற்சாகமடைந்துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பகிர்ந்து…
Read MoreAuthor: reporter
*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!*
செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும்…
Read More‘கணம்’ திரைப்பட இயக்குநரின் புதிய திரைப்படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் நடிக்கும் இப்படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்துடன் இணைந்து தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும்…
Read More*ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!*
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. மதுரையில் படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு,…
Read More“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
மொழி, பிராந்திய எல்லைகளைக் கடந்து மனதுக்கு நெருக்கமான காதல் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இந்த ஆண்டு, உணர்வுப்பூர்வமான கதைகளையும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்று வருவது நம்பிக்கையளிக்கும் மாற்றமாக அமைந்துள்ளது. அந்த வரிசையில், வண்ணமயமான காட்சிகளாலும், இதயத்தை வருடும் புரமோஷன் பாடல்களாலும் ஏற்கெனவே கவனம் ஈர்த்துள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தத் திரைப்படம் குறித்தான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். “‘ஹைக்கூ’ படத்தை உருவாக்கும்போது, எல்லா வயதினரையும் கவரக்கூடிய ஒரு காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. பொதுவாக, காதல் கதைகளுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும்…
Read Moreஅர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) – பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ – John Doe’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ- John Doe’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது.…
Read Moreஅக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம்…
Read Moreபெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார…
Read Moreயஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கப் போராடும் கேங்க்ஸ்டர் உலகத்தை நம் கண்முன் கொண்டு வர இருக்கும் ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. பெர்னூரு என்ற கற்பனையான அரசாட்சியையும் அங்கு அதிகாரம் செலுத்தும் குடும்பங்களையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. இங்கு பெண்களே முன்னின்று தலைமை தாங்குவதுடன், தங்களுக்குச் சொந்தமான அதிகாரத்தையும் உரிமைகளையும் தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக இந்த அரசாட்சியை நிலைநிறுத்தி வந்த வலிமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் பின்னால்…
Read Moreட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர்…
Read More