பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர்…
Read MoreAuthor: reporter
ராட்சசன்’ இல்ல… ஆனா ‘த்ரிஷ்யம்’ ; புதிய கிரைம் டிராமா ‘பீப்’ குறித்து இயக்குநர் சண்முக சுந்தர்
‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’.. இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் டிராமாவாக, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.. எளிய பின்னணியில் இருந்து வரும், புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞன், இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் பள்ளிக்குச் செல்கிறான். அவனது நோக்கம் தனக்குப் பிடித்தமான நாயகியைச் சந்திப்பது மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வு நடக்கிறது. அவனது ஆறு நண்பர்கள் கொண்ட குழு அதிலிருந்து…
Read Moreநடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக…
Read Moreஇந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார்.…
Read Moreஅக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’
எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்… கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது. தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான…
Read More40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்.., படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை…
Read More‘ரைட்டர்’ இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – படப்பிடிப்பு துவக்கம்!
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து…
Read Moreஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது.., இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால்,…
Read Moreஇலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. Harish cinemas சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். *இலங்கையில் நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீடு* ‘நல்லபடம்’ திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல் வரிகளை இலங்கையைச் சேர்ந்த பிரபல கவிஞரும் தமிழ்சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் உள்ளிட்டோர் பாடல்களுக்கு குரல் வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்…
Read Moreவலுவான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் மற்றும் நிலையான உரிமைகள் மேலாண்மை மூலம் திரை எழுத்தாளர்களை வலுப்படுத்தும் கூட்டு முயற்சி
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (Fipchain Technology Private Limited) நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்ட சேவைகள் பிரிவான ஐபி கிளைம்ப் (IP Climb), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association – SWAN) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, அவர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உரிமை மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அறிமுக நிகழ்ச்சி மற்றும் சேவைகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தில் பங்கேற்றனர். நிறுவனத்தின் பயணத்தை அறிமுகப்படுத்திய ஃபிப்செயின் நிறுவனர் ஜி. கே. திருநாவுக்கரசு, புரொடியூசர் பஜார் மற்றும்…
Read More
