முதலமைச்சர் விஜய்க்கு விரைவில் பாராட்டு விழா! – ‘வாழ்க்கையே போராட்டம்’ பட பூஜையில் இயக்குநர் பேரரசு தகவல்

நடிகர் விவேக் உடல் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ஆர் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கே.ஏ.அசோக் குமார் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், முத்துக்காளை, சுப்பராஜ், ரெபக்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு வேலன் சகாதேவன். ஜி இசையமைக்க, வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் எழிலரசன் பாடல்கள் எழுத, ரவி தேவ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பி.ஆர்.ஓவாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று (ஜூலை…

Read More

” காமராஜ் ” திரைப்படத்தின் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.

அன்புடையீர் வணக்கம். இந்நாட்டிற்கு தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள். பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான். திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. ‘காமராஜ்’ திரைப்படத்துக்குப் பின் ‘WELCOME BACK GANDHI’ ‘திருக்குறள்’ போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் ‘காமராஜ்’ திரைப்படத்துக்கான கடனை திரும்பச்செலுத்த உதவவில்லை. அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயணிக்கிறேன். ‘காந்தி’ திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியது. ‘அம்பேத்கர்’ திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் சுமார் 18 கோடி ரூபாய் உதவின. தமிழக அரசு ‘பெரியார்’ படத்துக்கு உதவியது பெருந்தலைவர் காமராஜரை தாங்கள் ஒரு வழிகாட்டியாக கொண்டுள்ள நிலையில், தங்கள் அரசு எனக்கு உதவும் என்ற…

Read More

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு! 

‘2018’, ‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை…

Read More

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ! பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர்…

Read More

பாசக்கார அமைச்சர் – இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி…!

விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த ‘நாகா’ படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ். இவர் எஸ்.ஏ., சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் கூறுகையில்., ” இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய ‘ரசிகன்’, ‘மாண்புமிகு மாணவன்’ மற்றும் ‘ஹரிதாஸ்’, ‘வட்டக்கானல்’ போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம். ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.அதுமட்டுமல்ல எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது. தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் கூட, எங்களைப் பார்த்தவுடன்…

Read More

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ! பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர்…

Read More

இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் ஏற்புரையில் கோரிக்கை

ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்: “தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலிசெய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர். இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு…

Read More

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய…

Read More

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்குகிறது – EVIL DEAD BURN

Curtain Raiser – இந்த புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடரை உருவாக்கியவர் சாம் ரெய்மி! தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! அதன் வெற்றியின் அடிப்படையில், தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது! ஈவிள் டெட் ரைஸ் (2023) வெளியானது! ஈவிள் டெட் பர்ன் (2026) என்பது ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சி மற்றும் ஈவிள் டெட் தொடரின் 6வது பாகமாகும்! 2028ல் வெளிவரவிருக்கும் 7வது பாகத்தை எதிர்நோக்குங்கள்! Synopsis இதுவரை…

Read More

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில்

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் எம்.…

Read More