ஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன.…

Read More

துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா – செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர். இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில்..…

Read More

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன.. ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்…

Read More

சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குரலையும் திறமையையும் வெளிப்படுத்தலாம். இது வெறும் ஆடிஷன் மட்டுமல்ல; உங்கள் இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கும். 14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கோவை ஆடிஷனில் கலந்து கொள்ளலாம். *இடம் : *சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி* *துடியலூர் சாலை, சரவணம்பட்டி, கோயம்புத்தூர் – 641 035* *செப்டம்பர் 6, காலை 9 மணி முதல் ஆடிஷன் தொடங்கும் .* *Sony VIZHA* மற்றும் *Sony LIV* இணைந்து வழங்கும் தமிழ் ஐடல், தமிழின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் மிகப்பெரிய முயற்சியாகும்.

Read More

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர்…

Read More

ராட்சசன்’ இல்ல… ஆனா ‘த்ரிஷ்யம்’ ; புதிய கிரைம் டிராமா ‘பீப்’ குறித்து இயக்குநர் சண்முக சுந்தர்

‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’.. இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் டிராமாவாக, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.. எளிய பின்னணியில் இருந்து வரும், புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞன், இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் பள்ளிக்குச் செல்கிறான். அவனது நோக்கம் தனக்குப் பிடித்தமான நாயகியைச் சந்திப்பது மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வு நடக்கிறது. அவனது ஆறு நண்பர்கள் கொண்ட குழு அதிலிருந்து…

Read More

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக…

Read More

இந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார்.…

Read More

அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்… கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது. தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான…

Read More

40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்.., படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை…

Read More