மொழி, பிராந்திய எல்லைகளைக் கடந்து மனதுக்கு நெருக்கமான காதல் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இந்த ஆண்டு, உணர்வுப்பூர்வமான கதைகளையும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்று வருவது நம்பிக்கையளிக்கும் மாற்றமாக அமைந்துள்ளது. அந்த வரிசையில், வண்ணமயமான காட்சிகளாலும், இதயத்தை வருடும் புரமோஷன் பாடல்களாலும் ஏற்கெனவே கவனம் ஈர்த்துள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தத் திரைப்படம் குறித்தான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். “‘ஹைக்கூ’ படத்தை உருவாக்கும்போது, எல்லா வயதினரையும் கவரக்கூடிய ஒரு காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. பொதுவாக, காதல் கதைகளுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும்…
Read MoreAuthor: reporter
அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) – பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ – John Doe’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ- John Doe’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது.…
Read Moreஅக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம்…
Read Moreபெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார…
Read Moreயஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கப் போராடும் கேங்க்ஸ்டர் உலகத்தை நம் கண்முன் கொண்டு வர இருக்கும் ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. பெர்னூரு என்ற கற்பனையான அரசாட்சியையும் அங்கு அதிகாரம் செலுத்தும் குடும்பங்களையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. இங்கு பெண்களே முன்னின்று தலைமை தாங்குவதுடன், தங்களுக்குச் சொந்தமான அதிகாரத்தையும் உரிமைகளையும் தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக இந்த அரசாட்சியை நிலைநிறுத்தி வந்த வலிமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் பின்னால்…
Read Moreட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர்…
Read Moreதனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் எல்.கே. சுதீஷ் MP
தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம் பி யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் MP மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர். ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கும் , ஓசூர் சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதாரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாருக்கும் வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ஞாயிறு காலை 8.30 am மணி முதல் 10 am மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.. நவம்பர் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
Read Moreமூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!
விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும் வகையில் தனது குழுவையும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் என்பது படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைவதில்…
Read Moreஇயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. தனித்துவமான இசை மற்றும் பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில் அதன் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது. விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், ‘அப்பா குட்டி’ படத்தின் இசையும் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு தியாகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்க்கும். மு.மாறன் எழுதி…
Read More