எஸ்.ஏ. சந்திரசேகரனை சந்தித்து சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை பெற்றார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து, சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றார். அப்பொழுது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், தான் தலைவராக இருந்த போது சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் வெளிவந்தது, அதன் பின்னர் 13 வருடத்திற்கு பிறகு தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். சங்க வளர்ச்சிக்கும் உறுப்பினர்கள் நலனுக்கும் இந்த சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்ற முன்னாள் தலைவர்கள் ஆலோசனைகள் என்னை போன்று புதிய தலைமைக்கு, நிர்வாகத்தினை நடத்திடவும் மற்றும் திரைப்படத் துறைக்கு இன்னும் நிறைய புதிய திட்டங்கள் கொண்டுவர ஊக்குவிக்கும்…

Read More

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் மனோரமாமேக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டுள்ளது. சங்கீத் பிரதாப் அறிமுக நாயகனாக நடித்துள்ளார். இதில் ஷரஃபுதீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் ரூபின் (சங்கீத் பிரதாப்), தொலைவில் ஒலிக்கும் சத்தங்களையும் உரையாடல்களையும் கேட்கும் அபூர்வமான திறனைப் பெறுகிறார்.…

Read More

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சிகளிலேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற்பால் உற்சாகமடைந்துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பகிர்ந்து…

Read More

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பல பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சித்து குமார். காதலை உணர்வுப்பூர்வமாக இசை மூலம் வெளிப்படுத்துவதிலும் இவர் திறமையாளர் என்பதை ‘தீராக் காதல்’ போன்ற படங்களிலும் நிரூபித்துள்ளார். தற்போது, யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம், இன்று (அக்டோபர் 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இசை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னோட்டக் காட்சிகளில் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதனால் சித்து குமார் மகிழ்ச்சியடைந்துள்ளார். ‘ஹைக்கூ’ படத்தின் இசைப்…

Read More

“சிவப்பு நட்சத்திரம்” திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரக்கனி!

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சிவப்பு நட்சத்திரம்’ என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் இன்று வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்! இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின்  பசியை தீர்ப்பதற்கு தான். மாறாக பணம் படைத்தவர்கள் அதனை பதுக்கி வைத்து செயற்கையாக பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல. இதனை எல்லாம் கண்டும் காணாமல் அடிமையாக வாழ்ந்தால் இங்கு எதுவுமே பிரச்சனையில்லை. அதற்கு எதிராக வாழ்ந்தால் இங்கு எல்லாமே பிரச்சினை தான். என்ற கருவை சுமந்து, மானுடவியலின் பசியை போக்க முன்னெடுக்கிறது காதலும், புரட்சியும், அரசியலும், பொருளாதாரமும் ஆக… கதை கருவின் நாயகனாக டல்ஹவுசி பிரபு நடிக்கிறார். கதை நாயகியாக வர்ஷா நடிக்கிறார். சமூக அரசியல் தலைவனாக பொன்வண்ணன், போலீஸ் கமிஷனராக OAK சுந்தர், நீதிபதியாக பழ கருப்பையா, வில்லன்களாக சித்தார்த், தீரன், பாலமுருகன்,…

Read More

‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெண்களின் உணர்வுகள் தலைமுறைகளைக் கடந்தும் மாறாமல் இருப்பது குறித்தும், யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் குறித்தும், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது குறித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஃபெமினா ஜார்ஜ். தனது கதாபாத்திரம் குறித்துப் பேசிய நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது எனது கனவாக இருந்தது. அந்த வாய்ப்பு ‘ஹைக்கூ’ போன்ற நம்பிக்கையளிக்கும் படத்தின் மூலம் கிடைத்திருப்பதுடன், உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும்…

Read More

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களிடையே படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய…

Read More

HOPE (ஹோப்) – விமர்சனம்

ஹோப் என்ற கொரியன் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பதினைந்து அடி உயரமுள்ள வினோதமான மிருகம் ஒன்று, ஹோப் ஹார்பர் எனும் கிராமத்தைக் கன்னாபின்னாவெனச் சிதிலமடையச் செய்கிறது. அந்தக் கிராமத்து மனிதர்களை மிதித்தும், அறைந்தும், வீசி எறிந்து கொன்றும், அவர்கள் மீது கையில் கிடைக்கும் டூ-வீலர், கார் முதலிய கனமான பொருட்களைத் தூக்கிப் போட்டும் வெறித்தனமாகக் கொல்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் சராமரியாகச் சுட்டாலும், அதன் வலு குன்றாமல் மேலும் வீரியமாகத் தாக்கத் தொடங்குகிறது அம்மிருகம். அந்தக் கிராமத்தின் தலைமை போலீஸ் அதிகாரியும், அவரது பெண் அசிஸ்டென்ட்டும் மிகவும் போராடி அம்மிருகத்தைத் துரத்திக் கொல்கின்றனர். காட்டுக்குள் செல்லும் வேட்டையர்கள், காட்டுக்கு நடுவில் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தைக் காண்கின்றனர். அப்பொழுது, ஐடோவர் எனும் வேற்றுக்கிரகவாசியையும், அவர்களது மகாராணியான ஜாவூரையும் காண்கின்றனர். பதற்றத்தில் வேட்டையர்கள் வேற்றுக்கிரகவாசியைச் சுட, மாவேயோ எனும் வேற்றுக்கிரகத்துப்…

Read More

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சிகளிலேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற்பால் உற்சாகமடைந்துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பகிர்ந்து…

Read More

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!*

செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும்…

Read More