நிவின் பாலி மற்றும் மமீதா பைஜு இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள்… காதல் தோல்வியா 35 வயது ஆன பிறகும் கல்யாணம் செய்யாமல் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார் நிவின் பாலி.. நாயகி மமிதா கல்லூரி மாணவி.. ஒரு கட்டத்தில் நிவின் நல்ல கேரக்டரை புரிந்துகொள்ளும் மமிதா இவர் மீது காதல் கொண்டு அவரிடம் வெளிப்படுத்துகிறார்.. ஆனால் கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம் என்பதால் காதலை ஏற்க மறுக்கிறார் நிவின்.. நீ ஆசைப்பட்டபடி வெளிநாடு சென்று நன்றாக படித்து உன் வயதுக்கு ஏற்ப ஒருவனை திருமணம் செய்து கொள் என்று அட்வைஸ் செய்கிறார் நிவின். அதன் பிறகு மமிதா என்ன செய்தார்.. வேறு ஒருவரை தேடினாரா அல்லது நிவின் தான் வேணும் என்று ஒற்றைக் காலில் நின்றாரா என்பதெல்லாம் ஸ்கிரீன் ப்ளே.. நடிகர்கள்… நிவின் பாலி – ஜஸ்டின்…
Read MoreAuthor: reporter
‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!
‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்! • ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’ சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு…
Read Moreஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பம்!
பிரபல தொழிலதிபரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தில், தற்போது ஜாபர் சாதிக் தரப்புக்கு முக்கியமான திருப்பமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளும் சட்டரீதியாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக, அக்டோபர் 7 ஆம் தேதி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் தொடர்பான இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு, கடந்த பல மாதங்களாக இந்த விவகாரத்தில் நடைபெற்று வந்த…
Read Moreகமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.
கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தை ராஜ்கமல்…
Read Moreபள்ளி மாணவர்கள் இப்படத்தை பார்க்கும் நிலையை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இயக்குநர் பேரரசு பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை!
‘யானை மரம்’ என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு. இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார். யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனிதநேயத்தையும் இட்டிருக்கிறார். முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு. தமிழக அரசு இப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார்! தேசிய விருதுக்கு அனுப்ப கூடிய படம் ‘யானை மரம்’ என்று, படம் பார்த்த இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு…
Read More‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில், “முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில்…
Read MoreSikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட “Top 100 Tamil Leaders in Arabia”
துபாய்: உலகின் பல்வேறு துறைகளில் தமிழர்கள் தங்களின் திறமையாலும் உழைப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் நிலையில், அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத்தில் சாதனை படைத்த தமிழர்களின் வெற்றிப் பயணத்தை பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு நூல், துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற Sikaram 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டது. லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் இந்த பெருமைக்குரிய நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், Vijayan Ayyappan நூலின் முதல் பிரதியை MLA லீமா ரோஸ் அவர்களிடம் வழங்கினார். அரேபிய நாடுகளில் தமிழர்கள் உருவாக்கியுள்ள தொழில் வெற்றிகளையும், அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…
Read Moreஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!
பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன.…
Read Moreதுல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா – செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர். இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில்..…
Read Moreநிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன.. ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்…
Read More
