கதை…
ஒரு கிராமத்தில் வசிக்கும் ஏழு சிறுவர்கள் கால்பந்தாட்ட அணியில் சேர நினைக்கிறார்கள்.. ஆனால் இவர்களை எவரும் சேர்த்துக் கொள்ளவில்லை…
எனவே நாமளே ஒரு மைதானத்தை ரெடி செய்து அதில் ஆட வேண்டும் என நினைக்கிறார்கள்.. அப்போது அந்த கிராமத்தில் உள்ள அந்தோணி இவர்களுக்கு உதவுகிறார்..
ஒரு கட்டத்தில் இவர்கள் பல போட்டிகளில் பங்கேற்க நினைக்கின்றனர்.. அப்போது இவர்களுக்கு உறுதுணையாக நிஜ கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயனை சந்தித்து பயிற்சி கொடுக்க சொல்கின்றனர்..
உலக சாம்பியன் இந்த சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்தாரா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் அதிரடியான கால்பந்து ஆட்டம்..
நடிகர்கள்…
ஆண்டனி வர்க்கீஸ் – இஸ்மாயில் (Ismail)
• ஐ. எம். விஜயன் – ஐ. எம். விஜயன் (I M Vijayan)
• ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா (Raheena)
• லுக்மான் அவரான் – முனீர் (Munir)
• பாலு வர்க்கீஸ் – தீபக் (Dhepak)
• தனிஷ் பி.கே – உமர் (Umar)
• அமல் – குஞ்சு (Kunju)
• பாசித் – பர்ஹான் (Barhan)
இந்த செவன் ஸ்டார் பாய்ஸ் அணியின் கேப்டன் குஞ்சு.. இவனது சேட்டைகள் சிரிப்பு ரகம் என்றாலும் சின்னப் பையனாக 9 வயது பஉமர் கேரக்டர் ரசிக்க வைக்கிறது.. அவன் தான் கதையின் நாயகனாக ஆட்டநாயகனாக வருகிறார்..
கால்பந்து பயிற்சியாளராக உலக கால்பந்து ஜாம்பவான் ஐம். விஜயன் நடித்திருக்கிறார்.. பல படங்களில் வில்லனாக மிரட்டிய இவர் பயிற்சியாளராக வருகிறார்.. இவருக்கு இன்னும் கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்..
RDX காட்டாளன் மற்றும் ஐ எம் கேம் உள்ளிட்ட மலையாள படங்களில் மிரட்டிய ஆண்டனி வர்கீஸ் ள.. இதில் கிராமத்தில் இளைஞனாக வருகிறார்.. சிறுவர்களுக்கு ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்து எனர்ஜி பூஸ்டர் கொடுத்திருக்கிறார்.
ஆண்டனி வர்கீஸ் மற்றும் ஜுமானா காதல் இளசுகளுக்கு புடிக்கும்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசை: ஜேக்கஸ் பிஜய்
ஒளிப்பதிவு: பாய்ஸ் சித்திக்
சிறுவர்கள் கால்பந்து விளையாட்டு போட்டி.. எனவே விளையாட்டில் உள்ள சீரியஸ் மற்றும் அவர்களின் சேட்டைகளும் இடம் பெற்று இருப்பது சிறப்பு.. படத்தின் இசையும் பாடல்களும் ஓகே.. ஒளிப்பதிவாளரும் கேரளாவின் அழகை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்..
தயாரிப்பு: டி அசோக்
இயக்கம்: நிகில் பிரேம் ராஜ்
பிஆர்ஓ : வேலு
செவன் ஸ்டார் பாய்ஸ்…. மலையாள படம் என்றாலும் மலையாள என்று தெரியாத அளவுக்கு தமிழில் திருநெல்வேலி பாஷையை கலந்து கொடுத்து இருக்கிறார்.. முக்கியமாக பல காட்சிகள் தமிழ் எழுத்துக்களும் காட்டப்பட்டுள்ளது.. வசன உச்சரிப்பும் தமிழுக்கு பொருந்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு..
பல கிரிக்கெட் படங்களை பார்த்து பார்த்து போரடித்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த கால் பந்து புட்பால் ஆட்டம் ரசிக்க வைக்கும்..
இன்று பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு அரிதாகிவிட்டது பெரியவர்கள் எல்லாம் கிரிக்கெட் ஃபுட்பால் என்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்… ஆனால் முக்கியமாக குழந்தைகள் தான் இது போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும்.. அவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி அதற்கு பெரியவர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என இந்த செவன் ஸ்டார் பாய்ஸ் மூலம் மெசேஜ் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நிகில் பிரேம் ராஜ்..
