கதை… கோவையில் வசிக்கின்றனர் ராதிகா மற்றும் அவரது மகன் லியோ சிவக்குமார்.. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.. அதனுடன் போலீஸ் வேலைக்கு முயற்சித்து வருகிறார்.. மாதம் மாதம் சென்னைக்கு கௌதம் என்ற நபரை தேடி ஒரு அப்பார்ட்மென்ட்க்கு சென்று வருகிறார்… அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் காளி வெங்கட்.. நீ ஏன் அடிக்கடி வந்து செல்கிறாய் என்று கேட்கிறார்.. நான் கௌதமை சந்திக்க வேண்டும் அவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்.. அவர் உனக்கு யார் என்று கேட்க… என்னை அவருக்கு தெரியாது என்கிறார்… அப்படி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் போது ஒரு அருமையான பிளாஷ்பேக்.. அப்படி என்ன நடந்தது என்ன நடக்கப் போகிறது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் தான்…
Read MoreDay: November 27, 2026
சிட்டுக்குறிஞ்சி விமர்சனம்…
கதை… தாவரங்கள் ஆராய்ச்சிக்காக கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்கிறார் ரஜித்.. அங்கு ஒரு இக்கட்டான நேரத்தில் தான் சந்திக்க வந்த அதிகாரியை சந்திக்க முடியாமல் அவரது வீட்டில் தங்குகிறார்.. அவரது அழகான மனைவி நக்ஷா சரண் மீது ஒரே இரவில் காதல் கொள்கிறார் ரஜித்.. தன் காதலை சொல்லும் போது அவர் மறுக்கவே குற்ற உணர்ச்சியால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.. அவளின் நினைவாகவே இருக்கும் ரஜித் மறுவாரமே தன் நண்பன் பப்பு வை அழைத்துக் கொண்டு மீண்டும் கொடைக்கானலுக்கு வருகிறார்.. ஆனால் அவர் அங்கு சந்தித்த மனிதர்கள்.. தேநீர் கடை கீரை விற்கும் பெண், பால்காரர் பார்த்த இடங்கள் எதுவும் இல்லை.. அப்படி என்றால் அவர் கடந்த வாரம் வந்தபோது அங்கு என்ன நடந்தது.? எல்லாம் எப்படி மறைந்தது? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கேரளாவில் இருந்து தமிழ்நாடு…
Read Moreடிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ திரைப்படம் – டிரெய்லர் வெளியீட்டு விழா !!
நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இசையமைப்பாளர் ஜி.வி.…
Read Moreசிக்னல் அட் 11.30’ Signal At 11:30 – விமர்சனம்
கதை… நாயகன் சந்தோஷ் பிரதாப் இரவு வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு காரில் திரும்புகிறார்.. அப்போது சரியாக இரவு 11 :30 மணிக்கு ஒரு சிக்னல் அருகே நிற்கிறார்.. அப்போது டூவீலரில் செல்லும் ஒரு பெண்ணை (பவ்யா) நான்கு இளைஞர்கள் வேறு ஒரு பைக்கில் துரத்துகின்றனர்.. பவ்யாவை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.. சந்தோஷ் அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது.. இதனிடையில் தன் மகள் பவ்யாவை காணவில்லை என காவல்துறையில் கம்பளைண்ட் கொடுக்கிறார் தந்தை ஜெயபிரகாஷ்.. அதன் பிறகு என்ன நடந்தது.? பவ்யா இப்போது எங்கே இருக்கிறார்.? சந்தோஷ் என்ன செய்தார்? ஜெய்பிரகாஷ் என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ப தன்னுடைய உடல் மொழி மற்றும் பதட்டம் ஆகியவற்றை சரியாக கொடுத்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இவர் படம்…
Read More