நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌ ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌ சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை…

Read More

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய…

Read More

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன்  கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார். *கொச்சி, மே 2026:* லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் என மோகன்லாலின் பல்வேறு முகங்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம்,…

Read More

SUN NXT-இல் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் சிவா & பிரேம்ஜி அமரன் கலகல பேச்சு

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய ‘ஜல்சா பண்ணுங்கடா..’ ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது.‌ இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு… தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு தான் திரும்ப வேண்டும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய போது.. அங்கு இருந்தவர்களும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். சுருக்கமாக…

Read More

சிங்கப்பூரில் மீலாதுன் நபி திரைப்படம்

தாரகை முத்தமிழ் கழகம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு, மே 10ஆம் தேதி ஊட்லண்ட்ஸ் நூலகத் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதினை சிறப்பு விருந்தினர் வழங்கிக் கௌரவித்தார். மேலும், இப்படத்தின் சமூகத் தாக்கம் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இயக்குநர் மில்லத் அகமதுவுக்கு ‘சிறந்த ஆவணப் படம்’ விருதும் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 16-ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் இப்படத்தைத் திரையிடவுள்ள ரெயின்போ ஈவென்ட்ஸ் அமைப்பாளர் திருவாட்டி ரசிதா பேகம், படத்தின் சுவரொட்டியைப் பெற்றுக்கொண்டார்.   எனக்குத்…

Read More

இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான்…

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

வரவிருக்கும் இசை நாடகமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 21 அன்று வெளியிட்டார். இது படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாகும். மூத்த திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் ‘சாருகேசி’, இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இப்படத்தில் ஒய் ஜீ மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு…

Read More

சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!

தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன. புஷ்கர் – காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள்…

Read More

*இந்தியாவெங்கும் OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்கள் ! ப்ரைம் வீடியோவில் இப்பொது கண்டுகளியுங்கள்

புஷ்கர் – காயத்ரியின் எக்ஸாம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், அந்த தளத்தில் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பல அடுக்குகள் நிறைந்த குற்றத் தொடர்கள், பெண் போலீஸ் கதாபாத்திரங்களை எப்படி புதிய கோணத்தில் சித்தரித்து வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டிய நேரமாக இது தோன்றுகிறது. இந்த கதைகளில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் வெறும் சீருடையில் இருக்கும் அதிகாரிகளாக அல்ல; அவர்கள் உணர்ச்சிகளால் சிக்குண்ட மனிதர்கள், தங்களின் தனிப்பட்ட சுமைகளுடன் வாழ்பவர்கள், முறைகேடான அமைப்புகளுக்கு எதிராக போராடுபவர்கள், தவறுகளையும் மன அழுத்தங்களையும் சுமந்து செல்லும் நபர்கள். இந்த அணுகுமுறை பாரம்பரிய ‘ஹீரோயிக்’ போலீஸ் சித்திரிப்புகளை விட மிகவும் நிஜமாக உணரப்படுகிறது. அந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் ஐந்து முக்கியமான படைப்புகளை பார்க்கலாம். சுழல் : தி வோர்டெக்ஸ் – ஷ்ரேயா ரெட்டி நடித்த இன்ஸ்பெக்டர் ரெஜினா…

Read More

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′ திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான ‘மாஸ்’ அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும்…

Read More