நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’ இணையத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் அறிமுகமாகின்றனர். பெர்னூரு பாரம்பரியமும் அதைவிட அதிகமாக பகையும் கொண்ட இடம். இங்கு ஆட்சி செய்யும் பெண்கள் யாருக்கும் அடிபணிவதில்லை. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் கொழுந்துவிட்டெரியும் பகைமைகளால் உருவான பெர்னூரு ராஜ்ஜியத்தின் மையமே இந்த இரண்டு பெண்கள்தான். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதை. இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை…

Read More

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி அக்டோபர் 27 ஆம் தேதி மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் நடைபெற உள்ளது. அழைப்பின் பேரில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இந்தப் பிரீமியர் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், சர்வதேச ஊடகத்தினர் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். திரைப்படங்களின் வரலாறு, கலை மற்றும் தொழில்நுட்பத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் அகாடமி மியூசியம், இதற்கு முன்பு பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளையும் ஆஸ்கர் விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளது. இந்தியாவின் போற்றப்படும் இதிகாசமான ராமாயணத்தை சர்வதேச ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பிரீமியர் நிகழ்ச்சி படக்குழுவினருக்கு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.…

Read More

சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

‘மெர்சல்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், அக்டோபர் 16 அன்று, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற இணைப்பாணையை (Attachment) நீக்கக் கோரிய சன் டிவி நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும், அச்சொத்துகளின் மீது தனக்கு முழுமையான உரிமை இருப்பதாக என்றும் சன் டிவி நிறுவனம் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.…

Read More

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பெற்றோரின் அன்பையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத பந்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் இப்பாடல், கேட்பவர்களின் மனதை நெகிழ செய்யும். தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், திரையில் இடம்பெற்ற ஒரு பாடலாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் கலந்த ஒரு பாடலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதேபோன்ற உணர்வுப்பூர்வமான பாடலாக ‘ஜோ ஜோ மா’ பாடலை டி. இமான் உருவாக்கியுள்ளார். ஹரிசரணின் உணர்வுப்பூர்வமான குரலும் மோகன்ராஜனனின் வரிகளும் இப்பாடலுக்கு மேலும்…

Read More

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது தமிழ் ZEE5!

முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான தொடரான ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. அதிகாரம், செல்வாக்கு மற்றும் உண்மையைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்டு புதிய வழக்குடன் திரும்பும் இத்தொடர், அக்டோபர் 23, 2026 முதல் வெளியாகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இத்தொடரில், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக சரவணன் மீண்டும் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகச் சிக்கல்களுடன், சட்டம், நீதி மற்றும் உண்மை ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவை இந்தப் புதிய சீசன் தொடர்ந்து ஆராய்கிறது. ‘சட்டமும்…

Read More

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’,  திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. உகந்தர் முனி இயக்கத்தில், ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இப்படம், புராணம், கற்பனை, சாகசம் மற்றும் சமூகக் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களின் கலவையாகப் பிரம்மாண்டமான அளவில் உருவாகிறது. கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி அவர்கள் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் மஹிதர் ரெட்டியின் தாயார் பத்மா ரெட்டி அவர்கள் கிளாப் அடித்தார். நடிகர் ஆதி சாய்குமார் முதல் காட்சியை இயக்கினார். தயாரிப்பாளர் ராஜசேகர் அன்னபிமோஜுவின் தந்தை வீர…

Read More

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை…

Read More

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், ‘ஏஒ டி’ (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார். தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு மாறான திரைப்பட உருவாக்க அணுகுமுறையாலும் அறியப்படும் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts )  மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema )  வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பங்களிப்பு படத்திற்கு மேலும் நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் துல்கர் சல்மான், மீண்டும் ஒரு அழகான திரைப்படத்துடன் ரசிகர்களைச் சந்திக்கிறார். இப்படத்தில் அவர்…

Read More

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’ இணையத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் அறிமுகமாகின்றனர். பெர்னூரு பாரம்பரியமும் அதைவிட அதிகமாக பகையும் கொண்ட இடம். இங்கு ஆட்சி செய்யும் பெண்கள் யாருக்கும் அடிபணிவதில்லை. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் கொழுந்துவிட்டெரியும் பகைமைகளால் உருவான பெர்னூரு ராஜ்ஜியத்தின் மையமே இந்த இரண்டு பெண்கள்தான். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதை. இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை…

Read More

சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த உணர்வுகள் என பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது. தனது கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் ஒரு முன்னாள் கேங்ஸ்டரின் கதைதான் இப்படம். ஆனால் அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது அவர் மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ஜுன்…

Read More