விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது. *கோயம்புத்தூர்:* இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ்…
Read MoreAuthor: reporter
ஆகாஷ் எனக்கு தம்பி மாதிரி… ‘இதயம் முரளி’ அவரது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !!
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வினில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது.., இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.…
Read Moreவிரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம் – விரைவில் தமிழில் வெளியாகிறது. இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்ஷன்…
Read Moreசுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!
நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள்…
Read Moreஅர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!
சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’…
Read Moreகொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…
இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகம் சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M தமிழ் குமரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உறவினர்கள், நண்பர்கள், திரையுலக மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த திருமண விழா, மகிழ்ச்சிகரமான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreபிரதீப் ரங்கநாதன் -மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து- தி ஆல்ஃபா யூனிட்- சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் #PRS01
நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து – தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். தி ஆல்ஃபா யூனிட் இயக்கத்தில் உருவாகும் #PRS01 திரைப்படத்தில் மமீதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ராகவ் மேற்கொள்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்த திரைப்படத்தை…
Read Moreநடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி – ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்…
Read More‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி; வைரலாகும் விஷ்ணு விஷால் நட்பு தருணம்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார். உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப்…
Read Moreஎலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’ என தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான *ஆர்.டி.பாஸ்கர்* அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான *ஜெயன்* தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது. குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்! தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் *”என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்”* என்று *ரமணன் பாலகங்காதரன்* அவர்கள் முன்வந்தார். தன் தம்பிக்காக இயக்குனர் *வெங்கட் பிரபு*, *”நான் கதை தருகிறேன்”* என்றும், *யுவன் சங்கர் ராஜா* *”நான் இசை…
Read More
