மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி…
Read MoreAuthor: reporter
இந்திய (இசை) திரை உலகில் செஞ்சுரி அடித்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கே என்று பெயர் பெற்றவர் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்.. இவரது இசையில் உருவான பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.. தமிழில் இவர் ‘ஓர் இரவு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா படம் இவருக்கு இசை உலகில் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தது.. இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தமிழைத் தொடர்ந்து ஹிந்தி பதிப்பிலும் ‘விக்ரம் வேதா’ இசைக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.. எனவே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானார்.. மேலும் ‘அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.. ஜிவி பிரகாஷ் நடித்த ‘இம்மார்ட்டல்’ படத்திற்கும்…
Read More“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”…‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும்…
Read Moreபிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!
T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், “லெனின் பாண்டியன்” படத்தின் கதைக்களம், உருவாக்கம், நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான…
Read Moreஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்: ‘தி டார்க் ஹெவன்’ பட நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு
நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன. கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு…
Read More‘DHIK. DHIK..DHIK…’ டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..
JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் ‘Dhik.Dhik..Dhik…’ படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.. டீசர் வெளியீட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது. தற்போது ‘Dhik. Dhik.. Dhik…’ டீசர் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டீசருக்கு கிடைத்த டிஜிட்டல் வரவேற்பும், திரையரங்குகளில் நடைபெறும் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை…
Read Moreபத்து வருடங்களுக்கு பிறகு TIFF விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றது!
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர். டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம், சமகாலத்…
Read Moreதுருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் படம்
துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர். பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் முன் தயாரிப்பு…
Read Moreகீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணம் – அஜயன் பாலா !!
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார். இன்றைய விழாவில் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது.., “இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி…
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அரசியல் த்ரில்லர் படத்தின் டீசர் – இயக்குநர் தினா ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘Bloody Politics’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 107 விநாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் கதைக்களம் குறித்த ஒரு பார்வையை கொடுக்கின்றது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் டீசரில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அழுத்தமான வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. இயக்குநர்கள் பி. வாசு மற்றும் செல்வராகவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் டீசரில் கவனம் ஈர்க்கின்றது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால் இது ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவமாக இருக்கும்…
Read More
